தொழில் போட்டியால் நடந்த பயங்கரம்.. பஞ்சு வியாபாரி மீது தீ வைத்த கும்பல்!

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட வருசநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் அதே பகுதியில் இலவம் பஞ்சு வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 11 ஆம் தேதி இரவு சதீஷ்குமார் தனது வீட்டின் முன் நடந்து சென்றபோது ஒரு கும்பல் அவரை வழிமறித்து, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தது.
இதையடுத்து, அலறிக் கொண்டிருந்த சதீஷ்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்குமார் அளித்த தகவலின் அடிப்படையில், வருசநாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
இதைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த வருசநாடு கிராமத்தைச் சேர்ந்த மலைசாமி மற்றும் சிங்கராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் யாராவது ஈடுபட்டிருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவம் வியாபார தகராறு காரணமாக நடந்ததாக காவல் துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!