ஐபோனுக்காக நடந்த பயங்கரம்.. டெலிவரி மேனை பிளாண் பண்ணி கொன்ற கொடூரம்.. அதிர்ச்சி பின்னணி!

 
 அப்பராசித் குப்தா

நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதும் பெரும் பீதியை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஐபோனுக்காக டெலிவரி செய்யும் தொழிலாளியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாஹு என்ற நபர் 1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை கேஷ் ஆன் டெலிவரி மூலம்   ஆர்டர் செய்தார்.

இதற்காக டெலிவரி தொழிலாளி அப்பராசித் குப்தா சாஹு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ​​சாஹு தன்னிடம் அவ்வளவு பணம் இல்லாததால் தனது நண்பருடன் சேர்ந்து அப்பராசித் குப்தாவை கொன்றுள்ளார். டெலிவரி  செய்ய சென்ற மகன் இரண்டு நாட்களாக வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து, அதிரடி வேட்டை நடத்திய போலீசார், சாஹுவை கைது செய்தனர்.

விசாரணையில், ஐபோனுக்காக கொலை செய்யப்பட்டதாக சாஹு ஒப்புக்கொண்டார். பின்னர் வீட்டின் அருகே கால்வாயில் கிடந்த அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மொபைல் போனுக்காக நடத்தப்பட்ட இந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web