தொடரும் வேட்டை.. 3 நக்சலைட்டுகளை சுட்டுக்கொன்ற பாதுகாப்புப்படை வீரர்கள்!

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். பஸ்தார் ரேஞ்ச் போலீஸ் ஐஜி சுந்தரராஜ் கூறுகையில், "ஞாயிற்றுக்கிழமை காலை இந்திராவதி தேசிய பூங்கா அருகே பாதுகாப்புப் படையினர் நடத்திய கூட்டு நக்சலைட் எதிர்ப்பு தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சண்டை நடந்தது. மாவட்ட பாதுகாப்புக் குழு (டிஆர்ஜி), சிறப்புப் பணிக்குழு (எஸ்டிஎஃப்) மற்றும் மாவட்ட காவல்துறையினரால் நக்சலைட் எதிர்ப்பு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நீண்ட துப்பாக்கிச் சண்டைக்குப் பிறகு, சீருடை அணிந்த மூன்று நக்சலைட்டுகளின் உடல்கள், ஒரு தானியங்கி துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டன. தேடுதல் நடவடிக்கை இன்னும் தொடர்கிறது," என்று அவர் கூறினார்.இந்த துப்பாக்கிச் சண்டையுடன், இந்த ஆண்டு தனித்தனி துப்பாக்கிச் சண்டைகளில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஜனவரி 6 ஆம் தேதி முடிவடைந்த நாராயண்பூர்-தந்தேவாடா எல்லையில் உள்ள அபுஜ்மத்தில் மூன்று நாள் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.ஜனவரி 9 ஆம் தேதி சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று நக்சல்கள் கொல்லப்பட்டனர். முன்னதாக, ஜனவரி 3 ஆம் தேதி ராய்ப்பூர் பிராந்தியத்தின் கரியாபந்த் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு நக்சல் கொல்லப்பட்டார்.
இதேபோல், கடந்த ஆண்டு மாநிலத்தில் பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட தனித்தனி துப்பாக்கிச் சண்டையில் 219 பேர் கொல்லப்பட்டனர். இந்த ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி, பிஜாப்பூர் மாவட்டத்தில் நக்சல்கள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் எட்டு போலீசார் மற்றும் ஒரு ஓட்டுநர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!