வரதட்சிணை கொடுமை... கர்ப்பிணி மனைவியை அடித்தே கொலை செய்த கணவன்!

 
ரீனா
 

மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள தாண்டி குர்த் கிராமத்தைச் சேர்ந்தவர் மிதுன். இவருக்கும் ரீனா தன்வாருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. மேலும் அவர் தற்போது நான்கு மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் மிதுனும், அவரது தாயார் ரீனா தன்வாரும் அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

வரதட்சணை கொடுக்காததால் ஆத்திரமடைந்த மிதுனும், அவரது தாயும் ரீனாவின் கை, கால்களை வெட்டி, உடலில் தீ வைத்து எரித்தனர். இதையறிந்த கிராமவாசி ஒருவர், ரீனாவின் தந்தை ராம்பிரசாத் தன்வாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி, ரீனாவின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்து, அவர்களுடன் கிராமத்திற்கு சென்றனர். இந்தச் செய்தியைக் கேட்ட மிதுனின் தாயார் உடல் எரிந்து கொண்டிருந்ததை அப்படியே விட்டுவிட்டு ஓடிவிட்டார். பின்னர் ரீனாவின் குடும்பத்தினர் தீயை அணைத்து பாதி எரிந்த நிலையில் கிடந்த உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ராம்பிரசாத் தன்வார் கூறுகையில், “எனது மகளின் மாமியார் எனது மகளை அடிக்கடி பணம் கேட்டு சித்ரவதை செய்தார். இருந்தாலும், பிரச்னையை தீர்க்க அவ்வப்போது பணம் அனுப்பினோம். இந்த முறை கிராமத்தில் உள்ள ஒருவரிடமிருந்து, 'உங்கள் மகள் கொல்லப்பட்டு எரிக்கப்படுகிறாள்' என்று அழைப்பு வந்தது. நாங்கள் அங்கு சென்றபோது அவள் எரிந்து கொண்டிருந்தாள். இதுபோன்ற செயலை செய்த குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

இதுகுறித்து, காவல் நிலைய பொறுப்பாளர் ரஜ்னீஷ் சிரோட்டியா கூறுகையில், ""வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் தெரியவந்த உண்மைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது மிதுன் தன்வாரும், அவரது குடும்பத்தினரும் தப்பி ஓடிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web