இன்ஸ்டா வீடியோவுக்காக பைக்கில் சாகசம்... கார் மோதி 2 நண்பர்களும் சம்பவ இடத்திலேயே மரணம்!
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பலர் உயிரைப் பணயம் வைத்து வேடிக்கையான வீடியோக்களை வெளியிடுகின்றனர். சில விபத்துகள் நிகழ்ந்து சில உயிர்களை இழந்துள்ளன. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் நண்பர்கள் இருவர் பைக்கில் சாகசம் செய்த போது கார் மோதி பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜ்கரின் தொழிற்பேட்டையில் உள்ள இரண்டு நண்பர்கள் பைக்கில் நின்று சாகசம் செய்து கொண்டிருந்த போது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக், எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற நிஷாந்த் சைனி என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த தீபக் சைனி உடனடியாக ராஜ்கர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதற்கட்ட சிகிச்சைக்கு பின், தீபக் அங்கிருந்து ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எனினும், வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர்களது உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் காரை விட்டுவிட்டு ஓடிவிட்டார். இறந்தவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!