உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோன்.. கோவில் நிர்வாகத்தினர் கூறிய அதிர்ச்சி பதில்!

 
தினேஷ் ஐ போன்

செங்கல்பட்டு மாவட்டத்தில், கோவளம் முடிந்து மாமல்லபுரம் செல்லும் வழியில், திருப்போரூர் கந்தசாமி கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற கோவில் என்பதால், ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். முருகப்பெருமானுக்கு பலவிதமான விருப்பங்களுக்காக அர்ச்சனை செய்வது வழக்கம். இதில், பக்தர்கள் தங்கள் விருப்பப்படி தாலி, பானை, கண்மாலை, வேல், நாணயங்கள், ரூபாய் நோட்டுகளை உண்டியலில் நிரப்பி காணிக்கை செலுத்துகின்றனர். ஆறு மாதங்களுக்கு பிறகு திருப்போரூர் கந்தசாமி கோயிலில் இன்று உண்டியல் திறக்கப்பட்டது.

இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் குமரவேல் ஆய்வாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலையில் இன்று உண்டியல் திறக்கப்பட்டது. இதில், பக்தர்கள் காணிக்கையாக ரூ. 52 லட்சம், 289 கிராம் தங்கம், 6920 கிராம் வெள்ளி செலுத்தி இருந்தனர். பணத்தை எண்ணிக்கொண்டிருந்தபோது பணப்பெட்டியில் விலை உயர்ந்த ஐபோன் ஒன்று சிக்கியது. விசாரணையில், சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.

சென்னை சிஎம்டிஏ நிர்வாகத்தில் பணிபுரிபவர் தினேஷ். கடந்த அக்டோபர் 18-ஆம் தேதி கோயிலுக்குச் சென்ற தினேஷ் பணம் போட முயன்றபோது, ​​உண்டியலில் செல்போன் விழுந்ததாக கோயில் நிர்வாகம் மற்றும் அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஏற்கனவே புகார் அளித்திருந்தார். இதையடுத்து, அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரும் உண்டியல் பெட்டிக்கு சென்று செல்போனை எடுக்க முயன்றபோது, ​​உண்டியலில் விழுந்த பொருட்கள் அனைத்தும் முருகனுடையது என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர். செல்போனை கொடுக்க முடியாவிட்டால் வேறு செல்போனுக்கு உங்கள் டேட்டாவை மாற்றிவிடுங்கள் என்று கூறினர்.

செல்போன் எடுக்க வந்தவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனது செல்போனை மீட்டுத் தரக்கோரி சென்னையில் உள்ள இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளிடம் ஏற்கெனவே மனு அளித்துள்ளதாகக் கூறியதையடுத்து, உரிய விசாரணை நடத்தி அதிகாரிகள் முடிவெடுப்பதாகக் கூறி திருப்பி அனுப்பினர்.  இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ​​செல்போனை ஒப்படைப்பதற்கான சாத்திய கூறுகள் இருந்தால் ஒப்படைப்பதாக தெரிவித்தனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web