மருத்துவக் கழிவுகள் கொட்டிய விவகாரம்.. கேரள நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவு!
சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்டத்தில் 6 இடங்களில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கேரள மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே 30 லாரிகளில் கழிவுகளை எடுத்துச் சென்றது. இது தொடர்பாக கேரள உயர் நீதிமன்றமும் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதில் கேரள அரசு தோல்வியடைந்துள்ளது என்றும், இது அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் சட்டவிரோதமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது குறித்து விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, திருவனந்தபுரம் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று ஒப்பந்தம் செய்யப்பட்ட சுனேஜ் ஈகோ சிஸ்டம் என்ற நிறுவனம் கேரளா கழிவுகளை தமிழகத்தில் கொட்டுவது தெரியவந்தது. இதையடுத்து திருவனந்தபுரம் மாநகராட்சி 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
ஆனால், நிறுவனம் தரப்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. இந்நிலையில் கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகளை அகற்ற குத்தகைக்கு எடுத்த நிறுவனத்தை பிளாக் லிஸ்ட் செய்து அந்த நிறுவனத்துக்கு 3 ஆண்டுகள் தடை விதித்து கேரள சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டவிரோத நடவடிக்கைகளால் அரசுக்கு ஏற்படும் நஷ்டம் முழுவதையும் அந்நிறுவனமே ஏற்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!