சிறுவனை கடத்திய கும்பல்.. தீவிர சோதனையில் ஆந்திராவில் கண்டுபிடித்த போலீஸ்.. அதிர்ச்சி பின்னணி!

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சஷிதா பேகம் என்ற பெண்ணுக்கு ஆறு வயது சாகிப் உதீன் மற்றும் மூன்று வயது சாகிதுல் இஸ்லாம் என இரண்டு மகன்கள் உள்ளனர். சஷிதா பேகம் கடந்த 12 ஆம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு காய்கறி கடையில் வேலை செய்வதற்காக ரயிலில் வந்திருந்தார். சஷிதா பேகம் கடை உரிமையாளரைச் சந்திக்கச் சென்றபோது, அவரது ஆறு வயது மகன் சாகிப் உதீன் காணாமல் போனார்.
பீதியடைந்த சஷிதா பேகம் தனது மகனை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பல இடங்களில் தேடினார். தனது மகனைக் காணாததால், அவர் மத்திய ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, சிறுவன் இரண்டு இளைஞர்களுடனும், பின்னர் சில பெண்களுடனும் இருப்பது தெரியவந்தது.
அவருக்கு மொழி புரியாததால், சஷிதா பேகம் வாய்மொழி புகார் அளித்து சென்னையில் பல இடங்களில் தனது மகனைத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையில், கடந்த 14 நாட்களாக சிறுவனைத் தேடி வந்த மத்திய ரயில்வே போலீசார், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள நசரத்பேட்டை ரயில் நிலையம் அருகே அவனைக் கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, நேற்று (ஜனவரி 26) அங்கு சென்று சிறுவனை மீட்டனர்.
மேலும், சிறுவனைக் கடத்திய மூன்று ஆந்திரப் பெண்களை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆந்திராவைச் சேர்ந்த சரஸ்வதி, அஞ்சம்மா மற்றும் சாக்ஷிதா என்பது தெரியவந்தது. விசாரணையில், அவர்கள் அனைவரும் ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் வந்து ரயில் நிலையங்களில் பிச்சை எடுத்து, வியாசர்பாடியில் உள்ள காலியான மைதானத்தில் ஒரு கூடாரத்தில் தங்கியிருக்கும் கும்பல் என்பது தெரியவந்தது.
கடந்த 12 ஆம் தேதி இரவு, சிறுவன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியாக சுற்றித் திரிந்தபோது, அதில் சரஸ்வதி, சிறுவனிடம், “உன் அம்மாவை வேலைக்கு அழைத்து செல்ல வந்தது நாங்கள் தான்’’ என கூறி பேசினர். இதையடுத்து 13 ஆம் தேதி அதிகாலையில் உள்ளூர் ரயில் மூலம் சிறுவனை வியாசர்பாடிக்கு அழைத்துச் சென்றதாகவும் தெரிகிறது. பின்னர் கடத்தப்பட்ட சிறுவன் 14 ஆம் தேதி ரயிலில் ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.
மத்திய ரயில்வே சிறப்பு அதிரடிப்படை போலீசார் ரயிலுக்குள் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மூன்று சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு அதிரடிப்படை போலீசார் ஆந்திராவிற்கு சென்று சிறுவனை மீட்டு மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த கும்பல் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதாகவும் போலீசார் கண்டறிந்துள்ளனர். இந்த வழக்கில் மேலும் சில பெண் கடத்தல்காரர்கள் தலைமறைவாகி இருப்பதாகவும், அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட சிறுவனையும் கைது செய்யப்பட்ட மூன்று பெண்களையும் சென்னைக்கு அழைத்து வர மத்திய ரயில்வே சிறப்பு அதிரடிப்படை போலீசார் பணியாற்றி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவன் இன்று (ஜனவரி 27) அவரது தாயார் சசிதா பேகத்திடம் ஒப்படைக்கப்படுவார் என்று மத்திய சிறப்பு அதிரடிப்படை போலீசார் தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!