நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ... வீட்டு மாடியிலிருந்து தள்ளிவிடப்பட்ட சிறுமி!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் கரண் விஹர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. அப்பகுதியில் உள்ள வீட்டில் முனீஷ் என்ற நபர் வசித்து வருகிறார். அவருக்கும் பக்கத்து வீட்டாருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், முனீசுக்கும் அவரது அண்டை வீட்டாருக்கும் கடந்த வியாழக்கிழமை மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
अमन विहार इलाके में मोनू सक्सेना नाम के डीलर ने एक नाबालिक बच्ची को छत से फेंक दिया इस मामले में अमन विहार थाने के पुलिसकर्मियों पर रिश्वत खाकर सेटलमेंट करने के आरोप लग रहे हैं। @dcprohinidelhi @acpamanvihar @DelhiPolice @AmitShah @BJP4Delhi @yogenderchando1 @CPDelhi @LtGovDelhi pic.twitter.com/Pr3nZRn3TI
— Tehelka Radhika Sharma (@TehelkaRadhika) July 26, 2024

அப்போது, அண்டை வீட்டில் வசித்து வரும் 17 வயது சிறுமி வீட்டின் மாடியில் இருந்து முனீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனீஷ் சிறுமியின் கன்னத்தில் அறைந்துள்ளார். பின்னர், சிறுமியை வீட்டின் மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார்.
இதில், தெருவில் விழுந்த சிறுமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. காயத்தால் துடித்த சிறுமியை மீட்ட குடும்பத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள முனீசை தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டின் மாடியில் இருந்து சிறுமியை முனீஷ் தள்ளிவிடும் சம்பவம் தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.