மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகையாக வேணும்... ஜாய் கிரிசில்டா நீதிமன்றத்தில் மனு!
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் பராமரிப்பு தொகை கோரி மனுத் தாக்கல் செய்துள்ளார்.
2023-ஆம் ஆண்டு ஜாய் கிரிசில்டா மற்றும் ரங்கராஜ் கோயிலில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், அந்தத் திருமணம் சட்டப்படி பதிவு செய்யப்படவில்லை. பின்னர், ஜாய் கிரிசில்டா கர்ப்பமாகிய நிலையில், ரங்கராஜ் தன்னை விட்டு விலகியதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும், தனது கர்ப்பம், கருக்கலைப்பு உள்ளிட்ட விவரங்களை சமூக வலைதளங்களில் வெளிப்படையாகப் பகிர்ந்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, தற்போது அவர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், “நான் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் தொழிலில் ஈடுபட முடியவில்லை. எனவே வீட்டு வாடகை, மருத்துவச் செலவு மற்றும் இதர தேவைகளுக்காக ரங்கராஜ் மாதம் ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பராமரிப்பு தொகை வழங்க வேண்டும்” எனக் கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன. இதற்கிடையில், ஜாய் கிரிசில்டா கடந்த வாரம் மகளிர் உரிமை ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார். அதனையடுத்து ஆணையம் இருவரிடமும் விசாரணை நடத்தியது.

மற்றபுறம், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டிருந்த அறிக்கையில், “இந்த சர்ச்சையில் உண்மையை சட்டத்தின்படி நிரூபிக்க நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். நீதித்துறையில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
