கொள்ளையடிக்க சென்ற இடத்தில் மது அருந்தி உறங்கிய நபர்.. ஷாக்கில் போலீசார்!

 
 ஒயின் ஷாப் திருடன்

தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டத்தில் உள்ள நரசிங்கி நகரில் ஒயின் ஷாப் ஒன்று இயங்கி வருகிறது. மதுக்கடைக்குள் புகுந்த திருடன், கொள்ளையடித்து சென்றான். அதற்கு முன் ஒயின் ஷாப்பில் இருந்த மேற்கூரை ஓடுகளை அகற்றிவிட்டு உள்ளே நுழைந்தார். முதலில் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை செயலிழக்கச் செய்தார். அதன்பின், அங்கிருந்த பணத்தை கொள்ளையடித்தார்.

தொழிலதிபர் வீட்டில் 850 சவரன் தங்க நகைகள் கொள்ளை!!புதுக்கோட்டையில் பரபரப்பு!

இதையெல்லாம் திட்டப்படி முடித்த அவருக்கு மது அருந்துவதில் ஆர்வம் ஏற்பட்டது. இதனால், மதுவை மூச்சு முட்ட குடித்து அங்கேயே தூங்கினார். மறுநாள் காலை, கடையை திறந்தபோது, ​​இதைக் கண்டு ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர்.இதுகுறித்து, ஒயின் ஷாப் பொறுப்பாளர் நரசிங் கூறுகையில், ''டிச., 29ல், இரவு, 10 மணிக்கு கடையை அடைத்தோம்.

போலீஸ்

மறுநாள் காலை, 10 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது, ​​நபர் ஒருவர் மயங்கி கிடந்தார். மேற்கூரையை அகற்றியிருந்தார். அப்போது, ​​பணப்பெட்டியில் இருந்த பணத்தை எடுத்துள்ளார், தற்போது அவரை கைது செய்தனர். அச்சமயம் அவர் குடிபோதையில் இருந்ததால், அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு மட்டுமே செய்துள்ளனர். மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web