அமைச்சரின் சகோதரியிடம் கைவரிசை.. ரூ.49 லட்சத்தை ஆட்டைய போட்ட முன்னாள் எம்.எல்.ஏ, மனைவி கைது!

உத்தரபிரதேசத்தை யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசில் நிதின் அகர்வால் ஒரு அமைச்சராக உள்ளார். அவரது சகோதரி ருச்சி கோயல். சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் எம்எல்ஏ சுபாஷ் பாசி மற்றும் அவரது மனைவி ரீனா பாசி ஆகியோர், தனக்கு ஒரு பிளாட் வாங்கித் தருவதாக கூறி ரூ.49 லட்சம் மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து கோயல் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு, இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கில், ஹர்தோய் போலீசார் சுபாஷ் பாசி மற்றும் அவரது மனைவியை கைது செய்தனர். சுபாஷ் 2012 மற்றும் 2017 க்கு இடையில் சயீத்பூர் தொகுதியின் சமாஜ்வாதி கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.
அவர் தற்போது உத்தரபிரதேசத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான நிஷாத் கட்சியில் உள்ளார். இந்த சூழ்நிலையில், அவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோயலும் அவரது மனைவி ரீனாவும் கைது செய்யப்பட்டனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!