சந்தேகத்தால் நடந்த விபரீதம்.. இளம்பெண் கத்தியால் குத்தி கொலை.. அதிர்ச்சி பின்னணி!
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்தவர் ஷிகா மிஸ்ரா (35). இவரது கணவர் பிரஜேஷ் மிஸ்ரா. பிரஜேஷ் மிஸ்ரா சொந்தமாக கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த கட்டுமான நிறுவனத்தில் அனிகா மிஸ்ரா (33) என்ற பெண் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஷிகா மிஸ்ரா தனது கணவருக்கும் அனிகாவுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்தார்.
இதையடுத்து நேற்று முன்தினம் அனிகா மிஸ்ராவை சோனம் என்பவர் தங்கும் இடத்திற்கு வருமாறு ஷிகா மிஸ்ரா கூறியுள்ளார். அவரது அழைப்பின் பேரில் அனிகாவும், ஷிகாவும் அந்த இடத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ஷிகா மிஸ்ரா, அனிகா மிஸ்ராவை கத்தியால் குத்தினார்.
தடுக்க முயன்ற சோனமும் படுகாயம் அடைந்தார். கத்தியால் குத்தப்பட்ட அனிகா ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சோனம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஷிகா மிஸ்ராவை கைது செய்தனர். நிறுவன பெண் ஊழியர் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!