கணவருடன் சேர விடாத மாமியார்... தலையில் கல்லைப்போட்டுக் கொலை செய்த மருமகள்!
கரூா் மாவட்டம், தென்னிலையை அடுத்த கோடாந்தூா் வெட்டுக்காட்டு வலசு பகுதியைச் சோ்ந்தவா் சுப்ரமணி. இவரது மனைவி பாப்பாத்தி(70). இவா்களது மகன் லோகநாதன்(53). லாரி ஓட்டுநா். இவருடைய மனைவி விஜயலெட்சுமி. இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் லோகநாதனுக்கும், விஜயலெட்சுமிக்கும் ஏற்பட்ட தகராறில் விஜயலெட்சுமி கோபித்துக் கொண்டு திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த நாகம்மநாயக்கன்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
அவ்வப்போது குழந்தைகளை பார்ப்பதற்காக விஜயலெட்சுமி வெட்டுக்காட்டு வலசிற்கு வந்து செல்வாராம். இதனிடையே கணவரை விட்டு பிரிவதற்கு மாமியார் தான் காரணம் எனக் கருதி பாப்பாத்தி மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று காலை விஜயலெட்சுமி குழந்தைகளை பார்க்க வந்தார். பின்னா் தனது மாமியார் பாப்பாத்தியுடன் சோ்ந்து ஆட்டை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார்.
மொஞ்சனூா் அருகே வீரன்காடு என்ற இடத்தில் இருவரும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது பாப்பாத்திக்கும், விஜயலெட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி அருகில் கிடந்த கல்லை எடுத்து மாமியார் தலையில் போட்டு கொலை செய்துள்ளார். பின்னா் அங்குள்ள கந்தசாமி தோட்டத்தில் விஜயலெட்சுமி பதுங்கியுள்ளார்.
பாப்பாத்தி ரத்த வெள்ளத்தில் கொலை செய்து கிடப்பதை கண்ட அப்பகுதியினா் உடனே தென்னிலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை செய்து, பதுங்கியிருந்த விஜயலெட்சுமியை கைது செய்தனா்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!