இல்லத்தரசிகளுக்கு அடுத்த அதிர்ச்சி... சதமடித்த வெங்காயம்..!
மழைக்காலங்களில் வெங்காயம் விலை விண்ணைத் தொடுவது சமீபகாலமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று கிலோவுக்கு ரூ.40 உயர்ந்து, இன்று கிலோ ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
புறநகர் மற்றும் சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயம் விளைச்சல் மற்றும் வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி சுமார் 60 வாகனங்களில் 1,300 டன் நாசிக் வெங்காயம் வருகிறது.
இந்நிலையில், இன்று 500 டன் மட்டுமே வந்துள்ளதால் இந்த திடீர் விலை உயர்வு எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம், மற்ற காய்கறிகளின் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!