அதிர்ச்சி... அரசு பள்ளியில் மாணவனின் கைகளைக் கொடூரமாக கிழித்த சக மாணவன்!
அரசு பள்ளியில், மாணவனின் கையை சக மாணவன் கொடூரமாக பிளேடால் கிழித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேலூரில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக, பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான செய்திகள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரண்டு மாணவர்கள் கத்தியால் தாக்கி, மோதிக் கொண்டனர். வேலூர் அருகே உள்ள சதுப்பேரியை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் ஊரீஸ் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இவருக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே பிரச்னை இருந்ததாக கூறப்படுகிறது. மூன்று நாட்களுக்கு முன்னர் இரண்டு மாணவர்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ஆசிரியர்களும் இருவரையும் அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. எனினும் இன்று மதிய உணவு இடைவேளையின் போது இரு மாணவர்களுக்கும் இடையில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அப்போது திலீப்குமாரை சக மாணவன் பிளேடால் வெட்டினான். மாணவனின் தலை, முதுகு மற்றும் மார்பில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஊசூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு முதலில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தலையில் 16 தையல்கள் போடப்பட்டன. மேல் சிகிச்சைக்காக திலீப்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!