அடுத்த அதிர்ச்சி... பேருந்து கட்டணத்தைத் தொடர்ந்து பால் விலையும் உயருகிறது!
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் அடுத்த அதிர்ச்சியாக பால் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் தற்போது சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 1½ ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், பெண்களுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம், மகளிருக்கு ரூ.2,000 உதவித்தொகை உள்ளிட்ட 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
இந்த திட்டங்களால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், இதனால் மற்ற வளர்ச்சிப் பணிகளை செய்ய முடியவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக அரசு, அனைத்து வகையான அரசு பேருந்துகளிலும் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வு நாளை ஜனவரி 5ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கர்நாடகத்தில் பால் விலையும் விரைவில் உயர்த்தப்பட இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. பால் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விலை உயர்வு தொடர்பாக ஆலோசித்து வருகிறோம். விரைவில் கர்நாடக பால் கூட்டமைப்பு மற்றும் அரசுடன் ஆலோசித்து பால் விலை உயர்வு தொடர்பாக இறுதி முடிவு எடுப்போம் என கர்நாடக கால்நடை துறை மந்திரி வெங்கடேசன் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!