அடுத்த ஆப்பு.. இன்று பூமியை நெருங்கும் 2 பயங்கர விண்கற்கள்.. எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
இன்று பூமிக்கு அருகில் 2 விண்கற்கள் செல்லும் என்று நாசா விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். நாசாவின் 'ஜெட் பெர்ஃபோரேஷன் லேபரேட்டரி' பூமிக்கு அருகில் வரும் சிறுகோள்களை ஆய்வு செய்கிறது. அந்த வகையில் 2024 RO2 மற்றும் 2024 RJ16 என்ற இரண்டு விண்கற்கள் இன்று நம்மை நெருங்கிச் செல்லவுள்ளன. 2024 RO2 என பெயரிடப்பட்டுள்ள இந்த சிறுகோள் 110 அடி குறுக்கே உள்ளது.
இது இன்று இரவு சுமார் 16 லட்சம் கி.மீ தொலைவில் பூமியை கடந்து செல்கிறது. 16 இலட்சம் கி.மீ தூரம் என்று தோன்றலாம். ஆனால் அண்டை கிரகமான செவ்வாய் 5 கோடி கி.மீ உள்ளது. எனவே பூமிக்கு 16 லட்சம் கி.மீ., எவ்வளவு அருகில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த விண்கல் மணிக்கு 33,000 கிமீ வேகத்தில் பயணிக்கிறது.
பூமியில் மோதினால், ஹிரோஷிமாவில் விழுந்தது போல், ஒரே நேரத்தில் 75 அணுகுண்டுகளை வெடிக்கச் செய்தால் என்ன ஆகுமோ, இந்த விண்கல் அந்தளவுக்கு சேதத்தை ஏற்படுத்தும். விண்கல் விழுந்த இடத்தில் 1-2 கி.மீ ஆழத்தில் 15 சுற்றளவு கொண்ட பெரிய பள்ளம் உருவாகும். இந்த விண்கல்லின் தாக்க அதிர்வுகள் 5-6 கிமீ சுற்றளவுக்கு உணரப்படும். 100 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் பெரும் காட்டுத் தீ ஏற்படும். ஆனால் ஒரு விண்கல் பூமியைத் தாக்க 100,000 இல் 1% வாய்ப்பு மட்டுமே உள்ளது.
இரண்டாவது சிறுகோள், 2024 RJ16, 75 அடி அகலம் கொண்டது. இது 69 லட்சம் கி.மீ தொலைவிலும், 25,000 கி.மீ வேகத்திலும் பூமியைக் கடக்கும். இது பூமியைத் தாக்கும் வாய்ப்பு இல்லை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!