கட்சியை விட்டுக்கொடுத்த உன்னதமானவர் ... ஜானகி நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினி பேச்சு!
தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி ராமச்சந்திரன். இவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவியாவார். இன்று காலை மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா அதிமுக சார்பில் வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.இபிஎஸ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் முதலில் நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு, ஜானகியுடன் பயணித்தவர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டன. அதன்பிறகு, ஜானகியின் வாழ்க்கை தொடர்பான குறும்படம், கவியரங்கம், கிராமிய இசை நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், நடிகர் ரஜினிகாந்த் காணொளி மூலம் ஜானகி நூற்றாண்டு விழாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நடிகர் ரஜினி , “எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இக்கட்டான சுழல் காரணமாக ஜானகி அரசியலுக்கு வந்தார். ஜானகி மிகுந்த தைரியத்துடன் இருப்பவர், அவர் தைரியமாக முடிவெடுப்பவர். அதனால் தான் யாருடைய ஆலோசனையையும் கேட்காமல் அரசியல் தனக்கு சரிபட்டு வராது எனவும் நீங்கள் தான் சரியானவர் எனவும் முடிவு செய்து, ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்தார். அது அவருடைய மிகப்பெரிய குணமாகும். ஜானகியை நான் 3 முறை சந்தித்துள்ளேன்.
அவர் மிகவும் அன்பாக பழகக் கூடியவர். ராமாபுரம் எம்.ஜி.ஆர் ஜானகி வீட்டில் எப்போது போனாலும் உணவு கிடைக்கும். தினமும் 200 முதல் 300 பேர் வரை சர்வசாதாரணமாக உணவு உண்டு செல்வார்கள். இது அனைத்தும் ஜானகியின் மேற்பார்வையில் தான் நடக்கும். தமிழகத்தின் முதல் பெண் முதல்வர் ஜானகி, என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அவருக்கு இந்த நூற்றாண்டு விழாவை விமரிசையாகக் கொண்டாடுவதை நான் வரவேற்கிறேன். இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவர்க்கும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்”, என பேசியுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!