வடகிழக்கு பருவ மழை இன்று தொடங்குகிறது... 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

 
அச்சச்சோ…!  இன்று இந்த மாவட்டங்களில் எல்லாம் வெளுக்க போகும் கனமழை!!

தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை பெய்யும் மழை தென்மேற்கு பருவமழையாகவும், அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரை பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையாகவும் குறிப்பிடப்படுகிறது. இந்தியா முழுவதும் தென்மேற்கு பருவமழையை நம்பி இருந்தாலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழைதான் முக்கியமானது.

மழை

இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் சாத்தியம் அதிகம்.

கனமழை பெருவெள்ளம் வெள்ளம் மழை

இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களிலும் காரைக்காலிலும் கனமழை பெய்யும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குமரிக்கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 55 கி.மீ. வரை வீசக்கூடும் என மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?