அதிகாலை முதலே மெரினாவில் குவிந்த வடமாநில மக்கள்... !
தமிழகத்தில் சூரியனை வணங்கும் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதே போல, வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விழா சத் பூஜை ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி முடிந்த 6ம் நாள் அதாவது அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொண்டாப்படுகிறது.
முதலில் பீகார், உத்திரப்பிரதேசம், நேபாளம் மாநிலங்களில் கொண்டாடப்பட்டு வந்த இந்த பண்டிகை தற்போது பெரும்பாலான வடமாநிலங்களில் சூரியனை வணங்கும் விழா கொண்டாடப்படுகிறது.
சென்னையில் வசித்து வரும் வடமாநில மக்கள் இன்று அதிகாலை முதலே சென்னை மெரினாவில் குவிய தொடங்கினர்.தீபாவளி முடிந்த 6ம் நாள் இந்த சத் பூஜை தொடங்குகிறது. மொத்தம் 4 நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. நஹா கா எனும் முதல் நாள் பூஜையை தொடர்ந்து, கர்னா எனும் 2ம் நாள் பூஜையில் மக்கள் விரதம் இருக்க தொடங்குகின்றனர். 3ம் நாள் அருகாமையில் உள்ள நீர்நிலைகளுக்கு சென்று சூரிய அஸ்தமனத்தை வணங்குகின்றனர்.
அடுத்த நாள் காலையில், சூரிய உதயத்தின் போது பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள், பழங்கள் படைத்து சூரியனை மக்கள் வணங்குகின்றனர். அந்த வகையில் இன்று அதிகாலை முதலே சென்னையில் வசிக்கும் வடமாநிலத்து மக்கள் மெரினாவில் குவிந்துள்ளனர். அனைவரும் சூரிய உதயத்தை வணங்கி வருகின்றனர்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!