பெரும் சோகம்... நடுவானில் ஏற்பட்ட கோளாறால் விழுந்து நொறுங்கிய விமானம்... 20 பேர் பலி..!

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் யூனிட்டி ஸ்டேட்டில் அட்ராஜிக் என்ற சிறிய விமானம் எண்ணெய் வயல் விமான நிலையத்திலிருந்து ஜூபாவுக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்த போது திடீரென கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கியது.
இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 20 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் பெரும்பாலானோர், கிரேட்டர் பயனீர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்ணெய் தொழிலாளர்கள்.பலியானவர்களில் சீனா மற்றும் இந்தியாவை சேர்ந்தவர்களும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து யூனிட்டி மாநில தகவல் துறை அமைச்சர் கேட்வேச் பிபால் கூறியதாவது
சிறிய ரக விமான விபத்தில் பலியானவர்களில் 2 பேர் சீனாவை சேர்ந்தவர்கள்; ஒரு இந்தியரும் இருந்துள்ளார். இச்சம்பவம் விமானப் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்புகிறது. தெற்கு சூடான் சமீபமாக பல கொடிய விமான விபத்துக்களை சந்தித்து வருகிறது. இது விமானப் போக்குவரத்து பாதுகாப்பில் இருக்கும் குறைபாடுகளை வெளிக்காட்டுகிறது என கேட்வேச் பிபால் கூறினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!