விறுவிறுவென வேகமெடுக்கும் அரசியல் களம்... உதயநிதியின் எதிரியிடம் இருந்து விஜய்க்கு பறந்து வந்த வாழ்த்து செய்தி!

 
விஜய் பவன்

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப் போல உதயநிதியின் நேரடி அரசியல் எதிரியாக கருதப்படுகிற ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாணிடம் இருந்து விஜய்க்கு வாழ்த்துச் செய்தி வந்துள்ளது. இது குறித்து விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த பவன் கல்யாண், ட்விட்டரிலும் தனது வாழ்த்தை தெரிவித்திருந்தார்.

தமிழக அரசியலில் பரபரப்பைப் பற்ற வைத்திருந்தது நேற்று தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வி.சாலையில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கை, கோட்பாட்டை நடிகர் விஜய் வெளியிட்டார். விஜய், பாஜக மற்றும் திமுக தான் தங்களின் இரு அரசியல் எதிரிகள் என  தெளிவுபடுத்தினார்.


இந்நிலையில் தவெக தலைவர் விஜய்க்கு, பாஜகவின் கூட்டணி கட்சி தலைவரும், ஆந்திர துணை முதல்வர்  பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்ட ட்வீட்டில் "துறவிகள் மற்றும் சித்தர்களின் பூமியான தமிழகத்தில், புதிய ஒரு அரசியல் பயணத்தைத் தொடங்கியதற்காக நடிகர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

தவெக

நடிகர் விஜய் திமுக மற்றும் உதயநிதிக்கு எதிராக மறைமுக எதிர் அரசியலை கையில் எடுத்துள்ளார்.  ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், நடிகர் விஜய்க்கு வருங்காலங்களில் அரசியல் ரீதியான சில உதவிகளை செய்து, திமுகவை தோற்கடிக்க வியூகங்களை வகுப்பார் என அரசியல் விமர்சசர்கள் கருத்து தெரிவித்துள்ளார். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web