4 நாள் பயணமாக நாளை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்

 
4 நாள் பயணமாக நாளை ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்

ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கு 2021 ஜூலை 25 முதல் 28 வரை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் பயணம் மேற்கொள்கிறார்.

2021 ஜூலை 26 அன்று, கார்கில் வெற்றியின் 22 ஆம் ஆண்டை முன்னிட்டு 1999-ம் வருடம் நடைபெற்ற கார்கில் போரில் தங்களது வீரத்தை சிறப்பாக வெளிப்படுத்தி தியாகங்கள் புரிந்த இந்திய படையினருக்கு லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவகத்தில் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்துகிறார்.

2021 ஜூலை 27 அன்று ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் 19-வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் கலந்து கண்டு உரையாற்றுகிறார்.

From around the web