எகிறியது பூக்களின் விலை... மல்லிகை ஒரு கிலோ ரூ.3,000க்கு விற்பனை!
இன்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கடந்த 2 தினங்களாகவே தமிழகம் முழுவதும் மலர் சந்தைகளில் பூங்களின் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது.
கோயம்பேடு மலா் சந்தைக்கு தமிழகத்தின் தேனி, திண்டுக்கல், விருதுநகா், ராமநாதபுரம் உட்பட மாவட்டங்கள் ஆந்திரம், கா்நாடகம் போன்ற மாநிலங்களிலிருந்தும் தினசரி பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.
இந்நிலையில் கடும் பனிப்பொழிவு உட்பட பல்வேறு காரணங்களால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து வகை பூக்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது.
அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ. 1,800க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ. 3,000க்கும், ரூ. 600க்கு விற்பனையான ஒரு கிலோ கனகாம்பரம் ரூ. 800க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ரூ. 500க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ ஜாதி மல்லி ரூ. 750, ரூ.1,200க்கு விற்கப்பட்ட ஐஸ் மல்லி ரூ. 2,000க்கும் விற்பனை செய்யப்பட்டன.
இதே போல் ஒரு கிலோ முல்லை ரூ. 1,300லிருந்து ரூ. 1,800, சாமந்தி ரூ. 60,லிருந்து ரூ. 100, பன்னீா்ரோஜா ரூ. 80லிருந்து ரூ.160, சாக்லேட் ரோஜா ரூ.170லிருந்து ரூ. 200, சம்பங்கி ரூ.140லிருந்து ரூ.200, அரளிபூ ரூ.280லிருந்து ரூ.400, தாழம்பூ ரூ.130லிருந்து ரூ.250, ஒரு தாமரைப்பூ ரூ.10லிருந்து ரூ.20க்கும் விற்பனை செய்யப்பட்டன. விசேஷ நாட்கள் என்பதாலும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டும் கோயம்பேடு மலா் சந்தையில் அனைத்து பூக்களின் விலையும் உயா்ந்துள்ளதாக கோயம்பேடு மலா் சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.
தமிழகம் முழுவதும் இன்று தேவாலயங்கள், கோவில்களில் சிறப்பு அலங்காரங்கள் என்று அதிகளவில் பூக்கள் தேவையிருந்ததும் பூக்களின் திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!