நிலம் தொடர்பான பிரச்சனை.. வழக்கறிஞரை கடத்திய கும்பல்.. 2 மணி நேரத்தில் மீட்ட போலீசார்!
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த வக்கீல் நிலம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் காரில் கடத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததும் போடிநாயக்கனூர் நகர் போலீசார் 2 மணி நேரத்தில் கடத்தல் கும்பலை கைது செய்து வழக்கறிஞரை மீட்டனர். இந்நிலையில், நேற்று (நவ.,20) அதிகாலை ஓசூரில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தற்போது போடிநாயக்கனூரில் வக்கீல் காரில் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, “தேனியை சேர்ந்த சந்தன பாண்டிக்கும், வக்கீல் சுரேஷுக்கும் நில விற்பனை தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இந்நிலையில் இன்று (நவ.21) காலை 8 மணியளவில் போடிநாயக்கனூர் சுப்புராஜ் நகர் சிட்னி மைதானம் அருகே தொழில் செய்து வந்த வக்கீல் சுரேஷை 4 பேர் கடத்தி சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, கடத்தப்பட்டவர்களின் வாகன எண் TN 57 AJ 9495 என்பதை அறிந்த போடிநாயக்கனூர் நகர் காவல் நிலைய ஆய்வாளர் கேத்தரின் மேரி, தேனி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் காவல் துறை வாகன ஓட்டுநர் சரவணனுடன் தைரியமாகச் சென்று வாகனத்தை மறித்தார். , வக்கீல் சுரேஷை மீட்டு காரில் இருந்த 4 பேரையும் கைது செய்தனர்.
இதுமட்டுமின்றி போடிநாயக்கனூரை சேர்ந்த அட்டாக் பாண்டி, தேனியை சேர்ந்த செல்வேந்திரன், சிவநேசன், "கடத்தல் சம்பவத்தில் இந்த 4 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், போலீசார் அவர்களை கைது செய்து தற்போது போடிநாயக்கனூர் நகர் காவல் நிலையத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!