உச்சநீதிமன்றத்தை பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதி!
இந்திய குடிமக்கள் உச்சநீதிமன்றத்தின் வரலாற்றை தெரிந்து கொள்ளவும், அதன் செயல்பாட்டை நெருக்கமாக பார்க்கவும் வழிவகுக்கும் வகையில், சனிக்கிழமைகளில் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை அதிகாரிகளின் உதவியோடு சுற்றிப்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை சுப்ரீம் கோர்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகள், மற்றும் விடுமுறை நாட்கள் தவிர மற்ற சனிக்கிழமைகளில் பொதுமக்கள் சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தை சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் இதற்கு https://guidedtour.sci.nic.in/ என்ற இணையதளம் மூலம் பொதுமக்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கதுமுதன்முறையாக இதுபோன்ற அனுமதி கடந்த 2018ல் நவம்பா் 3ம் தேதி வழங்கப்பட்டது. இதன் மூலம், இதுவரை 296 முறை பொதுமக்கள் சுற்றிப்பாா்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற கட்டடத்துக்கு இந்தியாவின் முதல் குடியரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் 1954ல் அடிக்கல் நாட்டினார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!