வெல்லம் குடோனில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்.. சோதனையின் போது எஸ்கேப்.. கடைக்கு சீல்!

 
போலி மருத்துவர்

திருப்பத்தூரில் வெல்லம் குடோனில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜம்மனபுதூர் கிராமத்தில் தனிநபருக்கு சொந்தமான வெல்லம் குடோன் இயங்கி வருகிறது. இந்த குடோனில் அங்கநாதவலசை பகுதியை சேர்ந்த வேலு என்பவர் 10 ஆம் வகுப்பு வரை படித்து விட்டு ஆங்கிலம் மருத்துவம் பார்த்து வந்துள்ளார்.

இதனை அறிந்த திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார். அப்போது, போலி மருத்துவம் பார்த்து கொண்டு இருந்த வேலுவை பிடிக்க முயன்ற போது தப்பி ஓடி உள்ளார்.

இதனையடுத்து க்ளினிக்கு பூட்டு போட்டு சீல் வைத்து சுமார் 5000ரூபாய் மருந்து பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த திருப்பத்தூர் கிராமிய போலீசார் தப்பி ஓடிய போலி மருத்துவர் வேலு என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web