இடிந்து விழுந்த அரசு மருத்துவமனையின் மேற்கூரை.. அலறியடித்து ஓடிய நோயாளிகள்!
மதுரை அரசு மருத்துவமனை கட்டடத்தின் மேற்கூரை திடீரென பெயர்ந்ததால் புறநோயாளிகள் அலறியடித்து ஓடினர். மதுரை பனகல் சாலையில் உள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பழைய கட்டடத்தின் வடக்குப் பகுதியில் புறநோயாளிகளுக்கான டிக்கெட் கவுன்டர் இயங்கி வருகிறது. தினமும் காலை 7 மணி முதல் நுழைவுச்சீட்டு வழங்கப்படுகிறது. அதன்படி இன்று காலை ஏராளமான புறநோயாளிகள் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றனர்.
அப்போது அவர்கள் முன்புறம் உள்ள மருத்துவமனை கட்டிடத்தின் மேற்கூரையின் கீழ் பகுதியில் இருந்த கான்கிரீட் கட்டமைப்பு திடீரென இடிந்து சிதறியது. இதை பார்த்ததும் வரிசையில் நின்று கொண்டிருந்த புறநோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இச்சம்பவத்தில் அட்மிட் கார்டு எழுத பயன்படுத்திய மர மேசை உடைந்து சேதமானது.
அதிர்ஷ்டவசமாக வெளிமாநிலத்தினர் எதிர்திசையில் நின்றதால் காயமின்றி தப்பினர். இல்லையெனில் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம். இதுகுறித்து தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டன. இந்த சம்பவத்தால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது ... விஞ்ஞான விளக்கம்!