தொடரும் சோகம்... சென்னையில் இன்று ஒரே நாளில் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து - பயணிகள் கடும் அவதி!
விமானப் பணியாளர்களின் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் தனது சேவையைத் தொடர்ந்து ரத்து செய்து வரும் நிலையில், சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் மட்டும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இத்துடன், தொடர்ந்து 6-வது நாளாக விமானச் சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

விமானப் பணியாளர்களின் பணி நேரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், இண்டிகோ நிறுவனத்தில் விமானிகள் மற்றும் பிற பணியாளர்கள் போதுமான அளவில் இல்லை. இதனால், அட்டவணையிடப்பட்ட உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் கடந்த 5 நாட்களாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமானங்கள் திடீரென ரத்து செய்யப்படுவதால் முன்பதிவு செய்த பயணிகள் பயணிக்க முடியாமல் தவிப்பதுடன், விமான நிலையத்தில் இண்டிகோ பணியாளர்களுடன் சண்டையிடும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. மேலும், இண்டிகோ விமானச் சேவை பாதிக்கப்பட்ட இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட பிற விமான நிறுவனங்கள், டிக்கெட் விலையை 5 மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டதையடுத்து, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. விமானங்கள் ரத்து படிப்படியாகச் சரியாகும் எனத் தெரிகிறது. அதுவரை பணியாளர் பணி நேரக் கட்டுப்பாடு விலக்கி வைக்கப்படும் என்றும், அடுத்த 24 மணி நேரத்துக்குள் அட்டவணைகள் இயல்பு நிலைக்குத் திரும்பி, அடுத்த 3 நாட்களுக்குள் முழுமையாக நிலைபெறும் என்றும் மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
