பாகிஸ்தானுக்கு பலத்த அடி... பாகிஸ்தான் ராணுவ தளத்தைக் கைப்பறிய தலிபான்கள்... வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. இது குறித்து வெளியான ஆப்கானிஸ்தான் ஊடக அறிக்கைகளின்படி, கைபர் பக்துன்க்வாவின் பஜூர் மாவட்டத்தில் அமைந்துள்ள சலர்சாய் என்ற இடத்தில் உள்ள பாகிஸ்தான் இராணுவ தளத்தை தலிபான் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
TTP Seizes Military Base in Bajaur’s Salarzai Region
— Kabul Frontline (@KabulFrontline) December 30, 2024
According to recent reports, Tehreek-e-Taliban Pakistan (TTP) fighters have taken control of a military base in Salarzai, located in Khyber Pakhtunkhwa's Bajaur district.
It is noteworthy that attacks on military forces in… pic.twitter.com/Nx5AqRefVQ
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பாக்டிகா மாகாணத்தில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் முகாம்கள் மீது பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, தலிபான் போராளிகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
கடந்த சில நாட்களாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பாதுகாப்பு ஆதாரங்களை மேற்கோள் காட்டி, எல்லையை கடக்க முயன்ற நிலையில் பாகிஸ்தான் படைகள் அவர்களின் முயற்சிகளை முறியடித்தன.
ஊடுருவல் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் படைகளுடன் இணைந்து மேம்பட்ட ஆயுதங்களுடன் பாகிஸ்தான் தளங்கள் மீது தலிபான்கள் கடுமையான தாக்குதலை நடத்தினர்.
ஆப்கானிஸ்தான் படைகளும் தீவிரவாதிகளும் கோஷ்கர்ஹி, மாதா சங்கர், கோட் ராகா மற்றும் தாரி மெங்கல் உள்ளிட்ட பல பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளை குறிவைத்தனர். இப்போது, சலார்சாய் இராணுவ தளத்தை கைப்பற்றியது தலிபான்களுக்கு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது. ராணுவ தளம் கையகப்படுத்தப்பட்ட வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் கிழக்கு எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 48 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக தலிபான் அரசு கூறியது. இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கப்படும் என தலிபான்கள் எச்சரித்திருந்த நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவ தளங்களை கைப்பற்றியதன் மூலம் அந்த அச்சுறுத்தலை முறியடித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!