இனி ரூ.10 லட்சம் வரையிலான கடன்களுக்கு எந்த அடமானமும் கேட்கக் கூடாது - தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

 
தலைமைச் செயலகம்

தனியார் கடன் நிறுவனங்கள் (Private Credit Firms) கடன் வசூலில் ஈடுபடும் அத்துமீறல்கள், அதிக வட்டி, மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுக்கும் வகையில், 'தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிகள் 2025' என்ற பெயரில் தமிழக அரசு அதிரடியான மற்றும் தெளிவான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அடாவடி வசூல் நடவடிக்கைகளில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய விதிகளின் முக்கிய அம்சங்கள் (தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் விதிகள் 2025):

அடமானம்/ஜாமீன் கூடாது:  இனிமேல், தனியார் கடன் வழங்கும் நிறுவனங்கள், வீட்டுக்குடும்ப தேவைக்காக வழங்கும் ரூ. 4 லட்சம் வரையிலான கடன்களுக்கும், சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கும் ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களுக்கும் ஜாமீன் அல்லது அடமானம் (Guarantee or Mortgage) கேட்கக் கூடாது.

கடன்

கட்டாயப் பதிவு:

தமிழகத்தில் இனி எந்தத் தனிநபர் அல்லது நிறுவனமாகக் கடன் வழங்கினாலும், கட்டாயமாக அரசின் ஆன்லைன் 'போர்டலில்' ரூ. 10,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்திருக்க வேண்டும். தவறான தகவல் அளித்தால் பதிவு உடனடியாக ரத்து செய்யப்படும்.

ஆவணங்கள் திரும்புதல்: கடன் வாங்கிய நபர் முழுவதையும் திருப்பிச் செலுத்திய 30 நாட்களுக்குள், நிறுவனம் வைத்திருக்கும் அவரது அனைத்து ஆவணங்களையும் திருப்பித் தர வேண்டும்.

புகார் தீர்க்கும் தீர்ப்பாயம்: கடன் நிறுவனங்களின் தவறான வசூல் நடவடிக்கைகள், மிரட்டல், மன உளைச்சல் போன்றவற்றை கண்காணிக்க புகார் தீர்க்கும் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடன்

தீர்வு காலக்கெடு: இந்தத் தீர்ப்பாயத்திற்கு வரும் புகார்கள் மீது இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தி, 60 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும். தேவைப்பட்டால் போலீஸ் விசாரணைக்கும் பரிந்துரைக்கப்படும்.

ஆண்டு அறிக்கை:  கடன் நிறுவனங்கள் ஆண்டுதோறும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள், வழங்கப்பட்ட கடன்கள், வசூல், வட்டி வீதங்கள், வசூல் நடைமுறைகள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அரசிடம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தச் சட்ட ரீதியான புதிய கட்டுப்பாடுகள் மூலம், தனியார் கடன் நிறுவனங்களின் சட்டவிரோத அச்சுறுத்தல், கூடுதல் வட்டி மற்றும் அடமானம் சுரண்டுதல் ஆகியவை முற்றிலும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!