பள்ளிக்கு லேட்டாக வந்ததால் மாணவிகளின் தலைமுடியை வெட்டிய ஆசிரியர்... பெற்றோர்கள் போலீசில் புகார்!

 
தலைமுடி

 ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தில் செயல்பட்டு வருகிறது கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி.   இந்த பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவியர் படித்து வரும் நிலையில்  மாணவிகள் சுமார் 18 பேர் காலதாமதமாக வந்ததாக சொல்லப்படுகிறது.  இதனால் ஆத்திரமும், கோபமும் அடைந்த ஆசிரியர் சாய் பிரசன்னா, தாமதமாக வந்த 18 மாணவிகளின் தலைமுடியை வெட்டியுள்ளார்.

தலைமுடி

மேலும்  மாணவர்களை தாக்கி, அவர்களை வெயிலில் நிற்க வைத்துள்ளார். இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என மாணவிகளிடம் மிரட்டலும் விடுத்துள்ளார்.  தலைமுடியை வெட்டியதால் மனமுடைந்த மாணவிகள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் அழுதுகொண்டே கூறியுள்ளனர்.

தலைமுடி

 இது குறித்து  பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து மாணவிகள் முடியை வெட்டிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web