கஷ்டமெல்லாம் தீருது... இந்த 3 ராசிக்காரர்களுக்கும் செவ்வாய் பெயர்ச்சியால் இனி அதிர்ஷ்ட மழை தான்!
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். அதே நேரத்தில் இந்த செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றிக் கொண்டே இருப்பார். இவர் தைரியம், வீரம், வலிமை இவைகளின் காரணியாக கருதப்படுகிறார்.
தற்போது செவ்வாய் மிதுன ராசியில் பயணம் செய்து வருகிறார். இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் செவ்வாய் கடக ராசிக்குள் நுழைகிறார். இந்த செவ்வாய் பெயர்ச்சியானது தீபாவளிக்கு முன் நிகழ இருக்கிறது. இந்த செவ்வாய் பெயர்ச்சியால் அனைத்து ராசிகளிலுமே தாக்கம் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதுவும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் நிதி நிலையில் நல்ல உயர்வைக் காண்பதோடு, தொழிலில் முன்னேற்றத்தையும் காண்பார்கள்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசியில் 4 வது இடத்திற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் புதிய வாகனம் வாங்கும் யோகம் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் பெறுவீர்கள். புதிய யோசனைகளால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம். நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான வணிகம் செய்பவர்களுக்கு இரட்டிப்பு லாபம் பெறும் வாய்ப்பு உருவாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே செவ்வாய் 5 வது வீட்டிற்கு செல்கிறார். இதனையடுத்து இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். காதல் கைகூடும். பணியிடத்தில் பதவி உயர்வு பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே 9 வது வீட்டிற்கு செவ்வாய் செல்கிறார். இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். தொழிலில் லாபம் கிட்டும். சுபகாரியம் கைகூடும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!