சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது... நல்ல காலம் வந்தாச்சு!
மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வின் காரணி கிரகமான சுக்கிரன் இன்று காலை 10.55 மணிக்கு தனது ராசியை மாற்றி கன்னி ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். தீபாவளிக்கு முன் நடைபெறும் இந்த பெயர்ச்சி முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
சுக்கிரன் மாதம் முழுவதும் கன்னியில் தங்குவார். அக்டோபர் 17 மற்றும் 28 தேதிகளில் அவர் நட்சத்திர மாற்றம் மேற்கொள்வார். இந்த பெயர்ச்சி அனைத்து ராசிகளையும் பாதிக்கும் நிலையில், மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான அதிர்ஷ்டம் கிட்டவுள்ளதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கடகம்:
சுக்கிரன் பெயர்ச்சி காலம் கடக ராசிக்காரர்களுக்கு நன்மை தரும். உடன்பிறந்தவர்களுடன் உறவு வலுப்படும். பல பயணங்கள் மேற்கொள்வீர்கள். அவை வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தரும். நிதிச் சிக்கல்கள் குறையும். வெள்ளைப்பூக்களை கோவிலில் அர்ப்பணித்து, பணப்பையில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது நன்மை தரும்.
சிம்மம்:
சுக்கிரன் பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக அமையும். முன்பே செய்த முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வெள்ளிக்கிழமைகளில் லட்சுமி அன்னையை வணங்கி, இனிப்புகள் மற்றும் தேனை நெய்வேத்தியம் செய்வதும் “ஓம் சுக்ரே நமஹ” மந்திரத்தை 108 முறை உச்சரிப்பதும் சிறந்த பலனை அளிக்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இது நன்மை தரும் காலமாகும். நிதிச் சிக்கல்கள் தீர்க்கப்பட்டு, வணிகத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள், உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் வரலாம். வெள்ளிக்கிழமைகளில் வெள்ளை நிற கைக்குட்டையை வைத்திருப்பதும், லட்சுமி அஷ்டோத்திரம் சொல்வதும் நன்மை தரும்.
இந்த பெயர்ச்சிக்குப் பின், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கும் வாழ்க்கையில் புதிய வாய்ப்புகளும் நிதி ஆதாயங்களும் உருவாகும். அதிர்ஷ்ட வாய்ப்பை சரியா பயன்படுத்திக்கோங்க.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
