Connect with us

கிருஷ்ணகிரி

தலைகுப்புற கவிழ்ந்த லாரி! 2 பேர் பலி! 10 பேர் படுகாயம்!

Published

on

தர்மபுரி மாவட்டம் சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது தொப்பூர். இந்தப் பகுதியில் பழுதாகி லாரி ஒன்று நின்றுவிட்டது. இந்நிலையில் தர்மபுரியில் இருந்து சேலம் சென்று கொண்டிருந்த கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் ஒன்று தொப்பூர் அருகே திடீரென பழுதாகிவிட்டது. வாகனத்தை பழுது நீக்கும் பணியில் திருச்சி மற்றும் விருதுநகரைச் சேர்ந்த 9 பணியாளர்கள் நியமிக்கப் பட்டிருந்தனர்.


அப்போது, கிருஷ்ணகிரியில் இருந்து கற்கள் ஏற்றி வந்த லாரி ஒன்று, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கழிவுநீர் சுத்திகரிப்பு வாகனம் மீது திடீரென மோதியது. அதே நேரத்தில் இதே லாரிக்கு பின்னால் வந்த இரண்டு வாகனங்களும் அடுத்தடுத்து மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
எதிர் பாராமல் ஏற்பட்ட இந்த விபத்தில், பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த திருச்சி ரத்தினவேல் உட்பட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 10க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் வீடுகட்ட கற்கள் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்ததால் சாலை முழுவதும் ஏராளமான கற்கள் சிதறியுள்ளன. இதனால் மற்ற வாகனங்கள் அப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு நேரில் விரைந்த காவல்துறையினர், வாகனங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.படுகாயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியா55 seconds ago

இந்தியாவில் 13 மாநிலங்களில் சிரோடைப் II டெங்கு காய்ச்சல் பாதிப்பு!..

ஆன்மிகம்3 mins ago

உங்க வீட்டில் இருந்தபடியே பெளர்ணமி பூஜையில் நீங்களும் கலந்துக்கலாம்! இதைப் படிச்சு பாருங்க!

செய்திகள்21 mins ago

IPL 2021 – இன்றைய ஆட்டம் : பெங்களூரு ராயல்சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோதல்

செய்திகள்39 mins ago

IPL 2021: புள்ளி பட்டியலில் சிஎஸ்கே முதலிடம்

ஆன்மிகம்48 mins ago

திருப்பதியில் இன்று முதல் இலவச தரிசனம்! தரிசன நேரமும் நீட்டிப்பு!!

அரசியல்54 mins ago

மத்திய அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று கண்டன போராட்டம்

செய்திகள்1 hour ago

இன்று (செப்டம்பர் 20) பெட்ரோல், டீசல் விலை

ஆன்மிகம்3 hours ago

உஷார்!! தமிழகம் முழுவதும் இன்றும் நாளையும் கிரிவலம் செல்ல தடை!

ஆன்மிகம்3 hours ago

இந்த ராசிக்காரர்களுக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் கிடைக்காது…! வீண் அலைச்சல் உண்டாகும்!

ஆன்மிகம்3 hours ago

மிஸ் பண்ணாதீங்க!! புரட்டாசி மாத பௌர்ணமி விரதத்துக்கு இத்தனை பலன்களா??

இந்தியா2 weeks ago

15 நாட்கள் முழு ஊரடங்கு! மத்திய அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இன்று விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் ரூ.2,000 /-!!

செய்திகள்2 months ago

அவசரப்படாதீங்க! ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் அதிரடி மாற்றங்கள்!

அரசியல்5 months ago

அதிர்ச்சி! சகாயம் ஐ.ஏ.எஸ். தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றம்!

அரசியல்5 months ago

2 நாட்கள் முழு ஊரடங்கு! மாநில அரசு அதிரடி!

அரசியல்4 months ago

இந்தியாவில் 6 முதல் 8 வாரங்கள் ஊரடங்கு!

அரசியல்4 months ago

நாளை முதல் தமிழகத்தில் இ-பதிவு !எப்படி விண்ணப்பிப்பது! ?

செய்திகள்3 months ago

தளர்வுகளில் பஸ், ரயில்கள் இயக்கப்படுமா?அதிகாரிகள் விளக்கம்!

அரசியல்3 weeks ago

பள்ளிகளுக்கு வர கட்டாயமில்லை! தமிழக அரசு!

அரசியல்4 months ago

எச்சரிக்கை.! தவறு செய்யும் அரசு அதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள்!

Trending