கேரளாவில் இருந்து கழிவுப் பொருட்களுடன் தமிழகம் வந்த லாரி... சுற்றி வளைத்த காவல்துறை!
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், உணவு கழிவுகள் எல்லையை தாண்டி கன்னியாகுமரி திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பனச்சமூடு பகுதியில் உணவு கழிவுகள் ஏற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான தனிப்படை வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தது. அந்த பக்கமாக 5 வாகனங்களில் இறைச்சி மற்றும் காய்கறி கழிவுகள் உட்பட பல்வேறு உணவு கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்து போலீசார் 9 பேரை கைது செய்தனர்.
கைதான 9 பேரும் அஸ்ஸாம், கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!