வேங்கைவயல் விவகாரம்.. மேலும் 1 மாதம் அவகாசம் கோரிய சிபிசிஐடி!

 
வேங்கைவயல்

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் வேங்கைவயல் கிராமம் அமைந்துள்ளது. டிசம்பர் 26, 2022 அன்று, இங்குள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் நீரில் மனிதக் கழிவுகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்களின் குடிநீரில் மனிதக் கழிவுகளைக் கலந்த குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. வேங்கைவயல் கிராமத்தில் இந்தக் கொடுமை நடந்து 2 ஆண்டுகளுக்கும் மேலாகியும், இதுவரை எந்த குற்றவாளியும் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி போலீசார், 330 பேரிடம் நேரடி ஆதாரங்களைப் பெற்றுள்ளனர். 31 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனையும், 5 பேரிடம் குரல் மாதிரிகளும் எடுத்துள்ளனர். ஆனால் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரி சிபிசிஐடி போலீசார் மீண்டும் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, மனுவை விசாரித்த புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்ற நீதிபதி, சிபிசிஐடி போலீசாருக்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web