பகீர் வீடியோ... விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் அடித்து செல்லப்பட்ட கார்கள்!

 
கார்கள்

 அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது டாணா புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்தப் புயல் நாளை மறுநாள் கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழக்தில் பல்வேறு மாவட்டங்ளில் கனமழை பெய்து வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையில்  அதிகபட்சமாக கோவையில்  9 செ.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

தொடர் மழைக் காரணமாக, கோவை மாநகரின் பல்வேறு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஏற்கனவே, கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில்  நேற்று பெய்த கனமழை காரணமாக காரமடை அருகே ஓடையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 2 கார்கள் அடித்து வரப்பட்டன. அதிர்ஷ்டவசமாக  அதில் பயணம் செய்தவர்கள் உயிர் தப்பினர்.

கார்

காரமடையில் மழை வெள்ளத்தால் அங்கிருந்த காரை அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில்   வைரலாகி வருகிறது.
கோவை விமான நிலையம் பகுதியில் 8.7 செ.மீ, கோவை தெற்கு தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் 7.7 செ.மீ, பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் 5.8 செ.மீ, வால்பாறையில் 7.4 செ.மீ ஆகவும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் 4.7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web