பகீர் வீடியோ.. JEE நுழைவு தேர்வில் தோல்வி.. விரக்தியில் மாணவி எடுத்த விபரீத முடிவு!

 
டெல்லி மாணவி

டெல்லி ஜாமியா நகர் பகுதியை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஒருவர் கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளியான தகவலின்படி, இறந்தவர், 17 வயதுடையவர், JEE தேர்வில் தேர்ச்சி பெறாததால் மனமுடைந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் அருகில் உள்ள நபர் தொலைபேசியில் பேசுவதைக் காட்டுகிறது. திடீரென்று, அந்த மாணவி மேலே இருந்து விழுந்தார். உடனே அங்கே கூட்டம் கூடியது. மாணவி தற்கொலை செய்துகொண்டதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தனர்.  இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த இடத்தில் தற்கொலைக் கடிதம் மீட்கப்பட்டது.

அதில், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால் ஏமாற்றம் அடைந்ததாகக் குறிப்பிட்ட சிறுமி, “என்னை மன்னியுங்கள், என்னால் அதைச் செய்ய முடியவில்லை” என்று எழுதியுள்ளார். இசசம்பவம் குறித்து பேசிய அப்பகுதி மக்கள், ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெறாததால் சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக தெரிவித்தனர். 

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web