பகீர் வீடியோ... தறிகெட்டு ஓடிய கார்... 100 மீட்டர் தூரம் போலீசாரை இழுத்துச் சென்ற கொடூரம்!
கர்நாடக மாநிலம், ஷிவமொக்கா நகரின் சகயாத்ரி கல்லுாரி எதிரே சமீபத்தில் போக்குவரத்து போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, பத்ராவதி பகுதியில் இருந்து வந்த ஒரு காரை ஓரமாக நிறுத்தும்படி போலீஸ்காரர் ஒருவர் சைகை காட்டினார்.
🚨🚨🚨A man driving an SUV in #Karnataka's #Shivamogga attemped to run over a traffic official after he was asked to stop for speeding. The traffic official, who was asking the driver to stop, was knocked over and landed on the car's bonnet.
— shafqat (@shafquath) October 24, 2024
The incident took place near Sahyadri… pic.twitter.com/bIPxnTwEfI
ஆனால் அதை கார் டிரைவர் மதிக்காமல் முன்னேறி செல்ல முயன்றார். அவரை தடுப்பதற்காக காரின் முன்னே வந்து நின்ற போலீஸ்காரர், மீண்டும் ஓரம் கட்டும்படி கூறினார். ஆனாலும் தொடர்ந்து காரை முன்னால் நகர்த்தியபடி இருந்தார் டிரைவர். ஒரு கட்டத்தில் போலீஸ்காரர் மீது காரை மோதினார்.
தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள போலீஸ்காரர், காரின் பானெட் மீது தாவி ஏறினார். அப்போதும் காரை நிறுத்தாமல் 100 மீட்டர் துாரத்திற்கு போலீஸ்காரரை இழுத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு, கார் டிரைவர் தப்பிச் சென்றார். கார் எண்ணை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த கார் மிதுன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!