பகீர் வீடியோ.. கொல்கத்தாவில் அடுத்த அதிர்ச்சி... வீட்டு வாசலில் ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த அரசியல் பிரமுகர்!

 
சுஷாந்தா கோஷ்

அதிர்ச்சியளிக்கும் விதமாக பாபா சித்திக் கொல்லப்பட்ட சம்பவத்தைப் போல மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் கொல்கத்தாவில் நடந்துள்ளது. வீட்டில் வாசலில் கவுன்சிலர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்றுள்ளனர். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய பிரமுகரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வார்டு 108 இன்  கவுன்சிலராக சுஷாந்தா கோஷ் உள்ளார். இவர் நேற்று முன் தினம் இரவு தனது வீட்டு வாசலில் உள்ள நாற்காலியில் அமர்ந்து சிலரிடம் பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது ​​இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து, சுஷாந்த் கோஷை இரண்டு முறை சுட்டனர். ஆனால் அவரது துப்பாக்கி செயலிழந்ததால் தோட்டா வெடிக்கவில்லை. இதை உணர்ந்த சுஷாந்த் கோஷ் உடனடியாக அந்த நபர்களை பிடிக்க முயன்றார். அப்போது, ​​பின்னால் அமர்ந்திருந்த நபரை மட்டும் விட்டுவிட்டு இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றவர் ஓடிவிட்டார்.

உடனே சுஷாந்த் கோஷ் ஓடி வந்து பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கவுன்சிலர் சுஷாந்த் கோஷை கொல்ல பீகாரைச் சேர்ந்தவர்கள் கூலிக்கு அமர்த்தப்பட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தின் பின்னணியில்  யார் உள்ளார்கள் என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web