ஓடி வந்த தொண்டர்.. கைகுலுக்க மறுத்த முதல்வர் ஸ்டாலின்.. வச்சு செய்யும் எதிர்கட்சியினர்!

 
முதல்வர் மு.கஸ்டாலின்

தமிழக அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடைய வேண்டும் என்பதற்காக கள ஆய்வு பணிகளை முதல்வர் மு.கஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், கோவையை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் இன்று விருதுநகருக்கு ஆய்வுக்கு சென்றார். அப்போது 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு முதல்வரை பார்க்க காத்திருந்தனர். காரில் வந்த முதல்வர், மக்கள் மத்தியில் நடந்து சென்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.


அப்போது வனத்துறை அதிகாரி ஒருவர் முதல்வருடன் கைகுலுக்க வந்தார். முதல்வர் கையை அசைத்ததும், அதிகாரிகள் உடனடியாக அந்த தொண்டரை அப்புறப்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஷேர் செய்த எதிர்க்கட்சிகள், “தொண்டர் கையை கூட முதல்வர் தொட மாட்டார், இதுதானா சமூக நீதி? சமத்துவமா?'' என்று சிலர் மற்ற கட்சித் தலைவர்களின் வீடியோக்களையும் தொண்டர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுகவினர் சிலர் கூறுகையில், முதல்வர் மக்களைச் சந்திக்கச் சென்றபோது, ​​அந்த நபர் தடுப்பை மீறி  நுழைந்ததால், பாதுகாப்பு கருதி முதல்வர் கைகுலுக்க மறுத்துவிட்டார். தமிழ்நாட்டின் ஆட்சிப் பொறுப்பில் உச்சத்தில் இருப்பவர் முதல்வர் மு.கஸ்டாலின் , மனு கொடுக்கவும் மக்கள் திரள்வது சகஜம். ஆனால் ஒருவன் பாதுகாப்பு வளையத்தை மீறினால் என்ன செய்வாr என்று  எல்லோருக்கும் தெரியும்; ஆயுதம் ஏந்தினால் என்ன செய்வது; அதேபோல், பாதுகாப்பு வளையம் உடைக்கப்பட்டால் என்ன செய்வது என்ற கேள்வியை அனைவரும் எழுப்பியுள்ளனர்.

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web