கதறிய மனைவி... திருப்பதிக்கு படியேறி சென்ற புதுமாப்பிள்ளை மூச்சு திணறி மரணம்!
கல்யாணமாகி 15 நாள் தான் ஆச்சு. திருப்பதிக்கு அலிபிரி பாதை வழியாக படியேறி தரிசிக்க சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய அலிபிரி நடைபாதை மூலமாக தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் நடந்து சென்று தரிசனம் செய்கிறார்கள். அந்த வகையில் தான், திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்ற புதுமாப்பிள்ளை ஒருவர் செல்லும் வழியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே கேசரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நரேஷ். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வரும் நரேஷுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. ஸ்வாதி என்ற பெண்ணை நரேஷ் மணம் முடித்துள்ளார். புதுமண தம்பதிகள் விருந்தினர் இல்லங்களுக்கு சென்று வந்துள்ளனர். பின்னர் நேர்த்திக்கடனாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நரேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்துள்ளார்.
அலிபிரி நடைபாதை வழியாக நரேஷ் குடும்பத்துடன் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது 2,350 வது படிக்கு வந்து போது திடீரென அங்கேயே சுருண்டு விழுந்துள்ளார். இதனால் பதறிப்போன குடும்பத்தினர் உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் நரேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
திருமணம் முடிந்த 15 நாளில் புதுமாப்பிள்ளை கோயிலுக்கு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருப்பதி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா