நவம்பர் 25ம் தேதி பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம்!

 
பாராளுமன்றம்


 
இந்தியாவில் பாராளுமன்ற  குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறும்  என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு அறிவித்துள்ளார்.  குளிர்கால கூட்டத்தொடர் குறித்து அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்  "மத்திய அரசின் பரிந்துரையின் பேரில்  நவம்பர் 25 முதல் டிசம்பர் 20ம் தேதி வரை குளிர்கால கூட்டத்தொடருக்காக இரு அவைகளையும் கூட்ட குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

அத்துடன்  நவம்பர் 26ம் தேதி அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டு 75 ஆண்டுகளான தினத்தை கொண்டாடும் நிகழ்வும் மைய மண்டபத்தில் நடைபெறும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீரில் இந்தியா கூட்டணியும் மற்றும் ஹரியானாவில் பாஜகவும் பெற்ற வரலாற்று வெற்றிகளுக்கு பிறகு கூடும் முதல் கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே மகாராஷ்டிரம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்து முடிந்துவிடும்.

பாராளுமன்றம்

இந்த கூட்டத்தொடரில், சர்ச்சைக்குரிய வக்ஃப் திருத்த மசோதா மற்றும் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த மசோதாக்கள் மீது நடத்தப்படும் விவாதங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்யலாம் எனவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.  

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...

 ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!

From around the web