வேலூரில் பரபரப்பு.. ரயிலில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. கழிவறையில் வைத்து கற்பழித்த இளைஞர்கள்!
கடந்த 26ம் தேதி கேரளாவில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. குறிப்பிட்ட ரயிலின் முன்பதிவு பெட்டியில் பெண் பொறியாளர் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரை தொடர்ந்து கண்காணித்த இரண்டு பேர் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னை ரயில் வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் திடீரென பொறியாளரின் செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.
உடனே பெண் பொறியாளர் பதற்றம் அடைந்து 2 பேரையும் விரட்டினார். அவர் கழிவறை அருகே வந்த போது, இரண்டு பேர் திடீரென பெண் பொறியாளரை அருகில் உள்ள கழிவறைக்குள் தள்ளி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் ரயிலில் இருந்து குதித்து தப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததும் தனக்கு ரயிலில் நடந்த கொடுமை குறித்து ரயில்வே போலீஸ் எஸ்பி ஈஸ்வரனிடம் புகார் அளித்தார்.
அதன்படி, அடையாளம் தெரியாத இருவர் மீது ரயில்வே போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் விரைவு ரயிலில் முன்பதிவு செய்து பயணம் செய்த பயணிகளின் விவரங்களையும் போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா