உலகின் மெகா போதைப்பொருள் கடத்தல் கும்பல்.. அமெரிக்காவில் சிக்கிய தலைவன்!

போதைப்பொருள் கடத்தலின் சர்வதேச மையமாக மெக்சிகோ உள்ளது. அதன்படி, சினோலோவா கார்டெல் (Sinaloa Cartel) மெக்சிகோவை தளமாகக் கொண்ட போதைப்பொருள் கடத்தல் அமைப்பாகும். இந்த அமைப்பின் தலைவரான ஜம்பாடா, அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தலில் முக்கிய பங்கு வகிக்கிறார். அதனால் அவர் மீது அமெரிக்காவில் ஏராளமான போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
எனவே அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்கா அறிவித்தது. மேலும் அவரை பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு சுமார் ரூ.125 கோடி பரிசு வழங்கப்படும் என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், டெக்சாஸ் மாநிலத்தில் சினோலா கார்டெல் அமைப்பின் தலைவர் ஜம்பாடா மற்றும் ஜோகுவின் குஸ்மான் லோபஸ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா