வைரல் வீடியோ... எலக்டரிக் காரை பயன்படுத்தி பூரி சுடும் இளைஞர்!

சமீபகாலமாக மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இளைஞர் ஒருவர் மின்சார காரை பயன்படுத்தி பூரி சுடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கருப்பு நிற மின்சார கார் ஒன்று நின்று கொண்டிருக்கிறது.
அட... எலக்டரிக் காரை பயன்படுத்தி பூரி சுடும் இளைஞர்! pic.twitter.com/BfUxVPtwDj
— Dina Maalai (@DinaMaalai) January 22, 2025
அட... எலக்டரிக் காரை பயன்படுத்தி பூரி சுடும் இளைஞர்! pic.twitter.com/BfUxVPtwDj
— Dina Maalai (@DinaMaalai) January 22, 2025
அப்போது அந்த காருக்கு முன்பாக இளைஞர் ஒருவர் அமர்ந்து காருடன் மின்சார அடுப்பை இணைத்து வீட்டில் சமையல் அறையில் நின்று சமைப்பை போல மாவை உருட்டி அடுப்பில் பாத்திரம் வைத்து பூரி சுடுகிறார்.
இதனையடுத்து வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர் மின்சார வாகனங்கள் மாசு கட்டுப்பாட்டை குறைக்கின்றன. பெட்ரோல் பயன்பாட்டை கட்டுப்படுத்துகின்றன. அத்துடன் சமையல் தேவைக்கும் பயன்படும் என்பதை கண்டுபிடித்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!