சுற்றி திரிந்த இளைஞரிடம் இருந்த 25 கிலோ கஞ்சா.. 27 வயது இளைஞரை அதிரடியாக கைது செய்த போலீசார்!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள நிஜாம்பூர் போலீசாருக்கு போதைப்பொருள் கடத்தல் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், பிவாண்டியின் மில்லத் நகர் பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த ஒரு இளைஞர் இருப்பதைக் கண்டனர். சோதனையின் போது, அவரிடமிருந்து ரூ.12.9 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சாவை போலீசார் மீட்டனர்.
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 27 வயது நபரை போலீசார் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் நான்டெட் மாவட்டத்தில் உள்ள லோஹா தாலுகாவைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது, யாருக்கு விற்க முயன்றார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!