48 அணிகள்… 104 ஆட்டங்கள்… 2026 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி அட்டவணை வெளியீடு!
உலகம் முழுவதும் கால்பந்து விளையாட்டு ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். 2026ல் மிகப் பெரும் திருவிழாவாக உலகக் கோப்பை கால்பந்து போட்டியைக் காண ஆவலுடன் காத்திருக்கின்றனர். 2026 ஜூன் 11ம் தேதி தொடங்கும் கால்பந்து போட்டி, ஜூலை 19ம் தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடைபெறுகிறது.
முதன்முறையாக 48 நாடுகள் பங்கேற்கும் இந்தத் தொடரில், போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றுள்ளன. ஏற்கெனவே நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்று மூலம் 42 அணிகள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 அணிகள் அடுத்தாண்டு மார்ச் இறுதிக்குள் தேர்வாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The FIFA World Cup 2026 match schedule will be revealed today! 🙌
— FIFA (@FIFAcom) December 6, 2025
The full reveal of match venues and kick-off times will take place in a live global broadcast at 12:00 EST from Washington DC.
போட்டி அட்டவணைப்படி, 48 அணிகள் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெறுகின்றன. லீக் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் மற்றும் மூன்றாம் இடம் பெறும் சிறந்த 8 அணிகள் சேர்த்து மொத்தம் 32 அணிகள் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறும். பிரேசில், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட முன்னணி அணிகள் வெவ்வேறு பிரிவுகளில் இடம் பெற்றுள்ளதால், லீக் சுற்றே கடும் போட்டியாக இருக்கும் என கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஜூன் 11-ந்தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவு அணிகளான மெக்சிகோ–தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா–தகுதி சுற்று அணி மோதுகின்றன. நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் அல்ஜீரியாவை சந்திக்கிறது. மொத்தம் 104 ஆட்டங்கள் 3 நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெறும் இந்த உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் ஜூன் 27-ம் தேதியுடன் நிறைவடைகின்றன. அதன் பின் நாக்-அவுட் சுற்று தொடங்கி, ஜூலை 19-ம் தேதி நியூஜெர்சியில் இறுதிப் போட்டி நடைபெறுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
